பொங்கல் பரிசுத்தொகுப்பு..! மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு- தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Dec 30, 2022, 12:22 PM IST
Highlights

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொங்கல் பரிசு தொகை

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக 2 ஆயிரத்து 356 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழக்கும் வகையில் அதனை கொள்முதல் செய்வதற்காக ரூ.72.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கவுள்ளார். இதனையடுத்து நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.

இபிஎஸ்க்கு அங்கீகாரமா.? மோதல் ஏற்பட வாய்ப்பு..! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி பரபரப்பு புகார்

மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு

இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அரிசி பச்சரிசி முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. 

நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும்

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்பதையும் குடும்ப அட்டைதாரர்கள் எவ்விதச் சிரமமுமின்றி நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெளிவுபடுத்தி விளம்பரம் செய்து நியாயவிலைக் கடைகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறப்புப் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் நியாயவிலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் பெற வரிசையில் காத்திருக்கும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுதலின்றி வழங்க வேண்டும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் எவரையும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை கொடுத்து முதலில் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் வரிசையில் நின்று எவ்விதச் சிரமமுமின்றி பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொங்கல் கரும்பு.! விவசாயிகளிடம் எவ்வளவு ரூபாய்க்கு, எப்படி வாங்க வேண்டும்- வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, நியாய விலைக்கடைகளுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும். மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக்கேட்டுக் கொள்ள, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த முன்னேற்றத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் உன்னிப்பாகக் கண்காணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணிகள் காரணமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதக் குந்தகமும் ஏற்படாவண்ணம் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அமமுகவில் அதிரடி மாற்றம்.. டிடிவி.தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

click me!