
ஆட் பிரோ நிறுவனத்துக்கு ரூ.7 கோடி எப்போது தர முடியும் என்று கோச்சடையான் பட தயாரிப்பாளர் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் பகல் 12.30 மணிக்கு பதில் தர லதா லழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லதா ரஜினிகாந்த் தயாரிப்பில் ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த ஆண்டு 2014 ஆம் ஆண்டும் மே 23 ஆம் தேதி கோச்சடையான் திரைப்படம் வெளியானது.
இப்படத்தை வெளியிடுவதற்கு முந்தைய தயாரிப்பு பணி மற்றும் வெளியீட்டு பொறுப்புக்கான உரிமம் சென்னையைச் சேர்ந்த ‘ஆட் பீரோ அட்வர்டைசிங் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளியீட்டு உரிமத்துக்கு ரூ.10 கோடி பெற்றுக் கொண்டு, ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற வேறு நிறுவனத்துக்கு உரிமத்தை மாற்றி வழங்கி விட்டதாக புகார் எழுந்தது.
மேலும், வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிக்காக ரூ.14.9 கோடிக்கு லதா ரஜினிகாந்த் ஒப்பந்தம் போட்டதாகவும் அதில் ரூ.8.7 கோடி மட்டும் கொடுத்துவிட்டு மீதி ரூ.6.2 கோடி ரூபாயை தராமல் ஏமாற்றியதாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆட் பிரோ நிறுவனத்துக்கு ரூ.7 கோடி எப்போது தர முடியும் என்று கோச்சடையான் பட தயாரிப்பாளர் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் பகல் 12.30 மணிக்கு பதில் தர லதா லழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.