மருத்துவ சீட்டு மோசடி வழக்கு - பாரிவேந்தரை கழட்டிவிட்ட உச்சநீதிமன்றம்...!

First Published Sep 23, 2017, 7:22 PM IST
Highlights
The Supreme Court has issued a decree asking for the removal of the case against the SBM University Medical College.


எஸ் ஆர் எம் பல்கலை கழக மருத்துவக்கல்லூரி சேர்க்கை தொடர்பான பார்வேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன் எஸ் ஆர் எம். பல்கலை கழகத்தில் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மாயமானார். 

அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பாரிவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் ரூ.72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் என்னும் பச்சமுத்துவை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தான் சேர்க்கப்பட்டதை ரத்து செய்யகோரி பாரிவேந்தர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் மதன் உள்ளிட்டோர் மீதான வழக்கு தொடரும் எனவும் தெரிவித்தனர். 

 

click me!