
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் 350 சவரன் நகையை கொள்ளையடித்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் நகை கைடை ஊழியராக இருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் ராமநாதபுரம் செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்தி ஏறி அமர்ந்திருத்தார்.
அப்போது, கையில் 350 சவரன் நகைகள் அடங்கிய நகை பையை வைத்திருந்துள்ளார். அங்கே அடையாளம் தெரியாத மர்ம நபர் அருகே வந்து அமர்ந்திருக்கிறார்.
தட்சிணாமூர்த்தி சற்று கண் அசரவே நகை பை திடீரென காணாமல் போனது. திடுக்கிற்று எழுந்த தட்சினாமூர்த்தி பதறியடித்து அருகில் இருந்த போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில், நகை பை பட்டும் அவனியாபுரம் சுற்று சாலையில் கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.