
கன்னியாக்குமரி மாவட்டத்தில் பேருந்து பயணிகளிடம் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 144 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
கன்னியாக்குமரி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் நகை அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த புகாரையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து பேருந்துகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த நான்கு பெண்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஓடும் பேருந்துகளில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்தது அவர்கள்தான் என தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 144 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.