
நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் அறங்காவலர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் மீது நடிகர் சங்க உறுப்பினர் வராகி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க கடன்களை அடைத்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கொடுக்கப்பட்ட உரிமம் உள்பட பலவற்றில் ஊழல் நடைபெற்றதாக வாராகி தொடர்ந்து கூறி வந்தார். இது தொடர்பாக நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் அறங்காவலர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.
ஆனால் போட்டி தொடர்பான அனைத்து கணக்கு விவரத்தையும், தம்முடைய இணையதளத்தில் வெளியிடப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்தது. ஆனால், அதில் விரிவாக ஏதும் குறிப்பிடவில்லை என தெரிகிறது. இதனையும் சுட்டிகாட்டியிருந்தார் வாராகி.
இது தொடர்பாக முக்கிய கருத்தை வெளியிட்ட வாராகி, நடிகர் கமல் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியவற்றிலிருந்து பணத்தை எடுத்து, ஸ்டார் கிரிக்கெட்டுக்கு செலவு செய்ததாக தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், கமல்ஹாசன் ஆகியோர் மீது நட்சத்திர கிரிக்கெட் ஊழல் சம்பந்தமான பத்திரிகையாளர் வராகி தொடர்ந்த வழக்கில் நடிகர்கள் கமல், விஷால் , நாசர் உட்பட ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி மற்றும் அறங்காவலர் கமல் ஹாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.