தவறான செய்தியை நம்ப வேண்டாம்..! மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்தது ஐ.ஆர்.சி.டி.சி..!

 
Published : Sep 23, 2017, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
தவறான செய்தியை நம்ப வேண்டாம்..! மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்தது ஐ.ஆர்.சி.டி.சி..!

சுருக்கம்

dont beleive false news said irctc

ஐ.ஆர்.சி.டி.சி வழியாக ரயில் டிக்கெட் பதிவுசெய்யும்போது, சில வங்கிகளின் அட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ஐ.ஆர்.சி.டி.சி., மறுப்புதெரிவித்துள்ளது. 

தனது பேமெண்ட் கேட்வே மூலம், அனைத்து வங்கிகளின் கிரெடிட்/டெபிட் அட்டைகள், இண்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பதிவு செய்யலாம் என்றும், எந்த வங்கியின் டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி   அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. 
எந்த இந்திய வங்கியின் மாஸ்டர் அல்லது விசா கார்ட் மூலம் செய்யப்படும் வங்கி பரிவர்த்தனையும் ஏற்கப்படும் என்பது மட்டுமல்லாமல், மேலும் சில கூடுதல் வசதிகளையும் கொடுக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி., இதன் மூலம், பரிவர்த்தனை நேரடியாகவும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும். 

இதுபோன்று நேரடி ஒருங்கிணைப்பு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால், ஐ.ஆர்.சி.டி.சி.க்கு கூடுதல் பணச் செலவு பிடிக்கிறது. இதை சரிக்கட்ட, வங்கிகளுக்கு அவர்களின் பரிவர்த்தனைக் கட்டணத்தில் ஒரு பகுதியை ஐ.ஆர்.சி.டி.சியுடன் பகிர்ந்து கொள்ள மட்டுமே கோரிக்கை விடுத்திருக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த கோரிக்கைக்கு ஓகே சொன்ன வங்கியின் மூலமாகத்தான் டிக்கெட் முன்பதிவு செய்ய  முடியும்  என வெளியான  தகவல்   பொய்யானது  என  மறுப்பு தெரிவித்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி

குறிப்பு :

அந்த  பொய்யான  தகவல்  இதோ !

{ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைகளில் இருந்து டெபிட் கார்ட் பேமெண்ட்டை ஐஆர்சிடிசி ரத்து செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் வசதியும் உள்ளது. டிக்கெட் கட்டணத்தை செலுத்த டெபிட், கிரெடிட், ஆன்லைன் பேமெண்ட், வாலட் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வங்கிகளின் டெபிட் கார்டுகளுக்கான பேமெண்ட் கேட்வே சேவையை ஐஆர்சிடிசி நீக்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், கனரா பேங்க், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் ஆகிய வங்களின் டெபிட் கார்ட்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.}
 

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் வரும் பிரதமர் மோடி..!
Tamil News Live today 16 December 2025: பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் வரும் பிரதமர் மோடி..!