
கடந்த 5 ஆம் தேதி சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பேர்ந்துக்காக காத்திருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி சுகன் தீப் சிங் பேடி விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
மேலும் காயமடைந்தவர்களின் முழு செலவும் அரசே ஏற்கும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரணம், காயமடைந்தவர்களின் முழு செலவும் அரசே ஏற்கும் எனஅதிகாரிகள் கூறியதாகவும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.