கஜா புயல் நிவாரணத்தில் ஊழல்... அம்பலமானது அதிகாரிகளின் அழிச்சாட்டியம்..!

By vinoth kumar  |  First Published Dec 27, 2018, 11:00 AM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவித்து தவித்த போது கலங்கிய பிற மாவட்ட மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி ஆசுவாசப்படுத்தினர். ஆனால், அரசு அதிகாரிகளின் செயல் செய்திருக்கும் ஒரு செயல் ’இதிலுமா இப்படி நடந்து கொள்வார்கள்?’ என வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.  
 
கஜா புயல் நிவாரணத்துக்கு கள்ளக்கணக்கு எழுதி சுருட்டியது அம்பலமாகி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகாவில் கல்லல், சாக்கோட்டை என 2 ஒன்றியங்கள் உள்ளன. இதில் சாக்கோட்டை ஒன்றிய பகுதி கிராமங்கள், கஜா புயலில் பெருமளவு பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் எந்த  நிவாரணங்களும் இதுவரை கிடைக்கவில்லை. புதுக்கோட்டை, மாவட்ட அருகில் உள்ள, சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் இந்த ஒன்றிய கிராமங்கள் இருக்கின்றன. இதனால் நிவாரண பணிகள் செய்ததாக 18 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கணக்கு காட்டியிருக்கிறார்கள். 

Tap to resize

Latest Videos

இதில் ஹைலைட் என்ன்வென்றால் மின்சார வினியோகம் இல்லாத ஒரு கிராமத்துக்கு, ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் கொடுத்தாக ரூ.2 லட்சம், மின்கம்பங்களை சரிசெய்ததாக மற்றொரு கிராமத்துக்கு 12 லட்சம், பிற செலவுகள் என போலி பில் போட்டு ரூ.18 லட்சம் வரை சுருட்டி விட்டார்கள். இதை பார்த்து மற்ற அதிகாரிகள் வாயடைத்து போயிருக்கிறார்கள். இந்த பிரச்னைகளை மற்ற கட்சிகள் கையில் எடுத்து போராட்டங்களை நடத்த தயாராகி வருவதாகக் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள். 

click me!