சிவகங்கை அருகே சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகளுக்கு பிறகு வலையராதினிப்பட்டி கிராமத்திற்கு முதன்முறையாக பேருந்து இயக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் விழாவாக கொண்டாடினர்.
சிவகங்கை அருகே சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகளுக்கு பிறகு வலையராதினிப்பட்டி கிராமத்திற்கு முதன்முறையாக பேருந்து இயக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் விழாவாக கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம் வலையராதினிப்பட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பேருந்து வசதிகள் இல்லாததால் தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து கீழப்பூங்குடி பள்ளிக்கு சென்று வருகின்ற அவல நிலை இருந்து வந்தனர். மேலும் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் 4 கிலோமீட்டர் தூரம் நிலை இருந்தது. அந்த விவகாரம் தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இதனால் கடும் விரக்தி அடைந்த கிராம மக்கள் டிசம்பர் 15-ம் தேதி அருகே இருக்கும் வெள்ளமலையில் குடியேறினர். பிறகு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசத்தால் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு நேற்று காலை அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதை தாசில்தார் ராஜா துவக்கி தொடங்கி வைத்தார்.
சுதந்திரமடைந்து 71 ஆண்டு கழித்து முதன்முறையாக பேருந்து இயக்கப்பட்டதால், கிராம மக்கள் விழாவாக கொண்டாடினர். பெண்கள் குலவையிட்டும், கைதட்டியும், ஆண்கள் மாலையிட்டு, பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்பகுதி மக்கள் கூறுகையில் பேருந்து வசதி கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக போராடி வந்தோம். தற்போது தான் இதற்கு தீர்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.