பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளிக்கூட கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளிக்கூட கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அம்மன் நகரை சேர்ந்தவர் சிவனேசன். அவருடைய மகள் சுவேதா (வயது 16). சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். புத்தக பைக்குள் மறைத்து பள்ளிக்கூடத்திற்கு செல்போன் கொண்டு வந்துள்ளார். இதை ஆசிரியர் கண்டித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர்கள் அந்த மாணவியின் தந்தையை அழைத்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி எதிர்பாரத விதமாக பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்தார். இடுப்பு எலும்பு, முதுகு தண்டு வட எலும்புகள் முறிந்து படுகாயத்துடன் ஆபத்தான நிலை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லம் போது வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சிவகங்கையில் நேற்றும் பள்ளி மாடியிலிருந்து கீழே குதித்து மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றை சடையுடன் பள்ளிக்கு வந்ததால் ஆசிரியை கண்டித்துள்ளார். இதனால் அம்மாணவி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.