அவரு கட்சியா நடத்துறாரு? கட்சி என்ற பெயரில் கம்பெனி தான் நடத்துறாரு! - டி.டி.வி.யை கலாய்த்த முன்னாள் அமைச்சர்...

By Suresh Arulmozhivarman  |  First Published Sep 1, 2018, 7:46 AM IST

'கட்சி' என்ற பெயரில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பெனி நடத்தி வருகிறார் டி.டி.வி. தினகரன் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 


சிவகங்கை 

'கட்சி' என்ற பெயரில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பெனி நடத்தி வருகிறார் டி.டி.வி. தினகரன் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அதில், "'இரட்டை இலை' சின்னம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொடுத்தது. 

திராவிட கட்சிகளாக இருக்கும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் தேர்தலில் போட்டி. வேறு எந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை. 

இன்று வந்தவர்களெல்லாம் கட்சி ஆரம்பித்து நடத்துகிறார்கள். அக்கட்சிகள் எல்லாம் விரைவில் காணாமல் போகும். டி.டி.வி. தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். 

ஒரு கட்சியை வைத்துக்கொண்டு 'கட்சி' என்ற பெயரில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பெனி நடத்தி வருகிறார் டி.டி.வி. தினகரன். 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதால்தான் டி.டி.வி. தினகரன் பக்கம் சென்றுவிட்டனர். 

அ.தி.மு.க. எத்தனையே முறை ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. ஆனால், கட்சி அழிந்துவிடவில்லை. ஆட்சி என்பது எங்களுக்கு ஒரு அங்கம் மட்டும்தான். 

மத்திய அரசுக்கு நாங்கள் ஒன்றும் தலையாட்டமாட்டோம் என்று முதலமைச்சரே கூறிவிட்டார். அ.தி.மு.க.வினர் யாருக்கும், எந்த குடும்பத்துக்கும் அடிமை இல்லை. பாரதீய ஜனதா கட்சி விவாகாரத்தில் போகலாமா? வேண்டாமா? என்று தி.மு.க. இரட்டை நிலையில் உள்ளது" என்று அவர் பேசினார்.

click me!