நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 'தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்' நாளை சிவகங்கையில் நடைபெற உள்ளது.
சிவகங்கை
நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 'தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்' நாளை சிவகங்கையில் நடைபெற உள்ளது. இளைஞர்கள் தவறாமல் பங்கேற்று வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை வேலைவாய்ப்பு நல அலுவலர் ராஜேஸ்வரி நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வேலைத் தேடும் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கையில் நடைப்பெற உள்ளது.
சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் உள்ள காஞ்சிரங்க ஹாலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி (அதாவது நாளை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனத்தினர் பங்கேற்கின்றனர். அதுமட்டுமின்றி 100-க்கும் மேற்பட்டப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் பி.இ. பயின்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று வேலைவாய்ப்புப் பெறலாம்.
இந்த முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டைஸ்போன்றவற்றை கொண்டுவரவும்.
மேலும், இம்முகாமில் பணிவாய்ப்புப் பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது" என்று அதில் கூறியிருந்தார் வேலைவாய்ப்பு நல அலுவலர் ராஜேஸ்வரி.