ஒரு நாள் லீவு போட்டு கிராம உதவியாளர்கள் போராட்டம் - எல்லாம் ஊதிய உயர்வு கேட்டுதான்...

First Published Jan 11, 2018, 9:18 AM IST
Highlights
The rural assistants struggled to get a one-day leave - all demanding wage increases ...


தஞ்சாவூர்

அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூரில் கிராம உதவியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.  அதன்படி, நேற்று  தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700-ஐ கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடுசெய்து வழங்க வேண்டும்.

காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று போனஸ் ரூ.3 ஆயிரம் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 84 பெண்கள் உள்பட 554 கிராம உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நேற்று 79 பெண்கள் உள்பட 477 பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

click me!