
ஆத்தூர் அருகே பாலத்தின் தடுப்பு சுவரின் மீது கார் மோதிய விபத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி நாக லெட்சுமி தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர் நாகலெட்சுமி தேவி. இவர் இன்று மாலை நீதிமன்ற பணிகள் முடித்து விட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மல்லியகரை அருகே சென்ற போது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
இதில் காரின் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த நாகலெட்சுமி தேவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் சென்ற கார் ஓட்டுனர் மற்றும் டவாலி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.