ஆளுநர் மாளிகையில் ஒளவையார் சிலை திறப்பு - வித்யாசாகர் ராவ், எடப்பாடி பங்கேற்பு...!!!

 
Published : Jul 14, 2017, 06:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
ஆளுநர் மாளிகையில் ஒளவையார் சிலை திறப்பு - வித்யாசாகர் ராவ், எடப்பாடி பங்கேற்பு...!!!

சுருக்கம்

Governor Vidyasagar Rao who is the Governor of Tamilnadu opened the statue in Gundi Governors palace

கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒளவையார் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் திறந்து வைத்தார். இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட திருவள்ளுவர் வெங்கல சிலையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார்.

அப்போது விரைவில் ஒளவையார் சிலையும் இங்கு அமைக்கப்படும் என வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

அதன்படி இன்று ஒளவையார் சிலையை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார். இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 25 December 2025: கிறிஸ்துமஸ் நாள்.. விழாக்கோலம் பூண்ட தேவாலயங்கள்..!
நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு