
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணையில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசிடம் கூடுதலாக 4 மாத கால அவகாசம் கேட்டுள்ளார் ஒய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்.
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக மக்கள் போராட்ட களத்தில் குதித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் எழுச்சி கிளம்பியது.
இதைதொடர்ந்து அவசரம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது தமிழக அரசு. இதனிடையே மாணவர்கள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் களமிறங்கி விட்டதாக கூறி போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஜல்லிகட்டு வன்முறை குறித்து விசாரணை நட்த்தப்படும் எனவும் அந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்தப்படும் எனவும் அப்போதைய முதலமைச்சர் ஒபிஎஸ் தெரிவித்தார்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டார். இதுகுறித்த அறிக்கை 3 மாதத்தில் தாக்கல் செய்ய செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணையில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசிடம் கூடுதலாக 4 மாத கால அவகாசம் வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.