"போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பு" - கமிஷனர் புது உத்தரவு..!!

Asianet News Tamil  
Published : Jul 14, 2017, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
"போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பு" - கமிஷனர் புது உத்தரவு..!!

சுருக்கம்

police security for police stations

தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்த வேண்டும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில், தேனாம்பேட்டை இ 3 போஸ் ஸ்டேஷனில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீசப்பட்ட பெட்ரோல் குண்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தது. இதில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். போலீஸ் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடரபாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், வாய்மொழியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். உத்தரவின்படி, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இது நடைமுறையில் இருந்தாலும், பல போலீஸ் நிலையங்களில் பின்பற்றுவது இல்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, போலீஸ் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் சரியான முறையில் வேலை செய்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் வாய்மொழி உத்தரவை அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மகுடம் சூட்ட போகும் பெண்கள்.. திமுக கூட்டணிக்கு 45% வாக்குகள்.. கருத்து கணிப்பு முடிவால் சிறகடிக்கும் அமைச்சர் நேரு
நாடாளுமன்றம் சென்ற பி.டி.உஷா.. கணவர் அதிர்ச்சி மரணம்..! வீட்டில் நடந்தது என்ன.?