
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கள்ளக் காதலனை கணவனை ஏவி கொலை செய்த பெண் உட்பட 3 பேரை போலிசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே உள்ள கண்ணனூர் வடக்கு தெருவில் குடியிருப்பவர் முருகன். இவரது மனைவி தேவி. இவருக்கும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பாப்பக்காபட்டியை சேர்ந்த ராமராஜ் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகனுக்கும் தேவிக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் முருகன் மனைவி தேவியிடம் ராமராஜனால் தான் நமக்குள் அடிக்கடி பிரச்சனை வருகிறது என்றும் பிரச்சனையை தீர்க்க ஒரே வழி ராமராஜனை நேரில் அழைத்து, உன்னிடம் பேச கூடாது என்று கூறி கண்டித்து அனுப்பிவிடலாம் என்று கூறியுள்ளார்.
முருகனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட தேவி, ராமராஜனை போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வா உன்னிடம் பேச வேண்டும் என்று கூறியதும் அவரும் புறப்பட்டு கண்ணனூர் வந்துள்ளார். பின்னர் முருகன் தனது உறவினரான துறையூர் அடிவாரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை வரவழைத்துள்ளார்.
முருகன்,முருகேசன், ராமராஜ் மற்றும் தேவி ஆகிய நான்கு பேரும் வீட்டில் இப்பிரச்சணை சம்மந்தமாக பேசி கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் முருகேசன் ராமராஜை கை கால்களை கட்டி கழுத்தை அறுத்தும் பிறகு துணியால் கழுத்தை இறுகிக்கியும் கொலை செய்துள்ளனர்.
சத்தம் கேட்டு ஒடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து முருகன், முருகேசன், தேவி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.