தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடிப்பு! கள்ளக்காதலி பலி... கள்ளக்காதலன் எஸ்கேப்!

Asianet News Tamil  
Published : Jun 21, 2018, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடிப்பு! கள்ளக்காதலி பலி... கள்ளக்காதலன் எஸ்கேப்!

சுருக்கம்

The poisoning powder in the Courtroom Hotel is poisoning

லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்ததில் கல்லாக்காதலி  பலி, கள்ளக்காதலன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி பொன் ஏஞ்சல். இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காய்கறி கடைக்காரர் சுதாகர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

சுதாகருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுதாகர் பாக்கியராஜ் வீட்டில் இலாத நேரத்தில் பொன் ஏஞ்சல் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும்  இவர்களது கள்ளத்தொடர்பு அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓட்டம்பிடித்தது. இது தொடர்பாக சுதாகரின் மனைவி சுமதி தனது கணவரை காணவில்லை என ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சுதாகரை தேடி வந்தார்கள் இதனிடையே ஊரை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு நேற்று குற்றாலத்துக்கு வந்தனர். குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர்.

இந்நிலையில், இன்று காலை அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள்  ஜன்னல் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு பொன் ஏஞ்சலும், சுதாகரும் வி‌ஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனே இதுபற்றி குற்றாலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாட்ஜ் ரூம் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பொன் ஏஞ்சல் இறந்து கிடந்தார். சுதாகர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து சுதாகரை போலீசார் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொன் ஏஞ்சல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!