கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...!கெடு விதித்த நீதிமன்றம்..! ஶ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்த பெற்றோர்..

By Ajmal KhanFirst Published Jul 22, 2022, 1:15 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக்கொள்வதாக பெற்றோர் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளனர்

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த  மாணவி ஶ்ரீமதி, கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் உள்ள மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டாத கூறப்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் மாணவி உடல் கூராய்வு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து  சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி மருத்துவர் ஜூலியான ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், விழுப்புரம். மருத்துவர் கீதாஞ்சலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தடையவியல் நிபுணர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டிருந்தனர்.  இதில் தங்கள் தரப்பு மருத்துவர் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஶ்ரீமதியின் தந்தை முறையீடு  செய்தார். அதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த தமிழக அரசு தரப்பு,  இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை மனுதாரர் தரப்பு தவறாக வழிநடத்துகிறார் என கூறியது.

கள்ளக்குறிச்சி மாணவி உடல் தகனம்; ஶ்ரீமதி தந்தைக்கு நாளை காலை வரை கெடு விதித்த உயர் நீதிமன்றம்

 மீண்டும் கலவரம் ஏதேனும் நடந்துவிடக்கூடாது என்பதில் அரசும், காவல்துறையும் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். நீதிபதிகள் இந்த கோரிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றத்திடமே வைக்கலாமே என தெரிவித்ததோடு,  இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக கூறினர், இதனையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என தடயவியல் நிபுணர் தெரிவித்தனர். மேலும் மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அப்போது மாணவி=யின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக  குற்றச்சாட்டினார்.. அப்போது நீதிபதி  ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் அமைதியாக தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி தெரிவித்தார். மேலும் பெற்றோரின் முடிவை சிறுது நேரத்தில் தெரிவிக்கும் படி கூறியிருந்தார்.

கள்ளக்குறிச்சி வன்முறையால் சான்றிதழ்,கல்வியை இழந்த மாணவர்கள்..!மாற்று ஏற்பாடு என்ன.? அன்பில் மகேஷ் புதிய தகவல்

இதனையடு்த்து மாணவி ஶ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். நாளை காலை 6 மணியில் இருந்து 7மணிக்குள் பெற்றுக்கொள்வதாக கூறினர்.  இதனையடுத்து நாளை மாலைக்குள் மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்கள்..!தண்டோரா மூலம் எச்சரிக்கை..நள்ளிரவில் சாலையில் வீசி சென்ற கிராம மக்கள்..

 

click me!