பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்கள்..!தண்டோரா மூலம் எச்சரிக்கை..நள்ளிரவில் சாலையில் வீசி சென்ற கிராம மக்கள்..

By Ajmal KhanFirst Published Jul 22, 2022, 12:50 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறை ஏற்பட்ட போது பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை திருப்பி வழங்கும்படி தண்டோரா மூலம் கேட்டுக்கொண்டதையடுத்து, நள்ளிரவில் சாலையில் பொருட்களை கிராம மக்கள் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளியை சூறையாடிய கும்பல்

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஶ்ரீமதி, கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை உருவானது. ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்று திரண்டு நடைபெற்ற போராட்டம்  வன்முறையாக மாறியது. இதனையடுத்து தனியார் பள்ளிக்குள் புகுந்த கும்பல் பள்ளி வளாகத்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீவைத்து எரித்தது. மேலும் பள்ளி அறையில் உள்ள மேஜைகள், நாற்காலிகளுக்கும் தீவைத்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளியில் அறையில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் மற்றும் பள்ளிக்கு அருகே வசிக்கக்கூடியவர்கள் எடுத்து செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாணவி உடல் தகனம்; ஶ்ரீமதி தந்தைக்கு நாளை காலை வரை கெடு விதித்த உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி வன்முறையால் சான்றிதழ்,கல்வியை இழந்த மாணவர்கள்..!மாற்று ஏற்பாடு என்ன.? அன்பில் மகேஷ் புதிய தகவல்

பொருட்களை சாலையில் வீசிய மக்கள்

பள்ளி வாளாகத்தில் இருந்த மேஜைகள், மின் விசிறி, ஏசி, சிலிண்டர் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த காட்சி சமூக வலை தளத்தில் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியது. மாணவியின் உயிரிழப்பிற்காக நடைபெற்ற போராட்டத்தால் 4 ஆயிரம் மாணவர்களின் படிப்பும் கேள்விக்குள்ளானது. இதனையடுத்து தனியார் பள்ளியில் இருந்து எடுத்த சென்ற பொருட்களை ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனியாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பள்ளியில் இருந்து வன்முறையின் போது எடுத்து சென்ற பொருட்களை நேற்று நள்ளிரவு சாலையில் வைத்து விட்டு சென்றனர். அந்த பொருட்கள் அனைத்தும் கனியாமூர் கோயிலில் காவல்துறையினரால் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இதில்  500க்கும் மேற்பட்ட பெஞ்சுகள், சமையல் பாத்திரங்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், ஏசிகள் உள்ளது. இந்த சம்பவத்தையடுத்து சாலையோர பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்.. பொய் செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்..? விசாரணையில் பகீர் தகவல்

click me!