
சென்னை தண்டையார்பேட்டை அருகே திறந்து கிடந்த வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் பணிரெண்டு சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை கப்பல் போஸ்தெருவை சேர்ந்தவர் முருகராஜ். இவர் ராயபுரத்தில் உள்ள கார்மெண்ட்ஸ் சென்டர் வைத்து துணி வியாபாரம் செய்து வருகிறார் .
இந்நிலையில் நேற்று மாலை வீட்டை திறந்து வைத்துவிட்டு குளிப்பதற்காக முருகராஜ் பாத்ரூம்க்கு சென்றுள்ளார்.
பின்னர் குளித்து விட்டு திரும்பியபோது, பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். பீரோவை ஆராய்ந்த போது, அதில் இருந்த பனிரெண்டு சவரன் தங்க நகை கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து முருகராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டையார் பேட்டை குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகலிலேயே திறந்து கிடந்த வீட்டின் உள்ளே சென்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.