தம்பி மனைவியுடன் தகாத உறவு...!!! - அண்ணன் குத்திக்கொலை...

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
தம்பி மனைவியுடன் தகாத உறவு...!!! - அண்ணன் குத்திக்கொலை...

சுருக்கம்

brother murdered due to illegal relation with wife

சென்னை அபிராமபுரத்தில் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த அண்ணனை தம்பி கத்தியால் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அபிராமபுரம் எல்டாம்ஸ் சாலையைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரும் இவரது அண்ணன் ராஜேந்திரனும் மற்றொரு சகோதரரான புகழேந்தி என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

அப்போது மூவரும் மது அருந்தி கொண்டிருந்த போது, வெங்கட்ராமனுக்கும் ராஜேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த தம்பி வெங்கட்ராமன் அண்ணன் ராஜேந்திரனை கத்தியால் குத்தினார். இதில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் கொலை செய்த தம்பி வெங்கட்ராமனை கைது செய்து அவரிடம் விசாரனை மேற்கொண்டனர். 

விசாரையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வெங்கட்ராமனுக்கும் பாவனா என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இதை பயன்படுத்தி கொண்ட அண்ணன் ராஜேந்திரன் தம்பி மனைவி பாவனாவுடன் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. 

இதில் சந்தேகமடைந்த வெங்கட்ராமன் நேற்று மது அருந்தியபோது அண்ணன் ராஜேந்திரன் செல்ஃபோனை சோதனை செய்ததாக தெரிகிறது. அதில் அவரது மனைவி பாவனாவும் அண்ணன் ராஜேந்திரனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இருக்கவே அண்ணன் தம்பி இருவருக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

அதனாலேயே ராஜேந்திரனை வெங்கட்ராமன் குத்தியாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர்.. எழுந்த சர்ச்சை.. குவியும் எதிர்ப்பு!
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள் முடிச்சிடுங்க! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை