அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதியவர் ஒருவர் வாழ்த்து தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
திமுக அரசின் திட்டங்கள்
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையெனவும், அறநிலையத்துறையில் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் அறநிலையத்துறையை அகற்ற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐஐடியில் தினந்தோறும் நடைபயிற்சி செல்வார். அந்த வகையில் நேற்று நடை பயிற்சி சென்ற முதலமைச்சரை முதியவர் ஒருவர் சந்தித்தார்.
அறநிலையத்துறைக்கு பாராட்டு தெரிவித்த முதியவர்
அப்போது தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாக பாராட்டினார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், எல்லாரும் சொல்கிறார்கள் கோயிலுக்கு ஒன்றும் செய்வதில்லைனு, ஆனால் உங்க ஆட்சியில் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். கோயிலுக்கு வருமானம் இல்லை, ஆனால் தற்போது வருமான வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. அதனையெல்லாம் மீண்டுள்ளார்.
சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்
இதையெல்லாம் வெளியே வருவதில்லை. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆமாம் இன்று கூட சேகர்பாபு அறநிலையத்துறை திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் நிலம் மீட்பு தொடர்பாகவும் சிறப்பாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதியவர் கோயிலில் 10 வருடமாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை. தற்போது அதிகளவில் நடைபெறுவதாக கூறினார். இதற்கு அருகில் இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளிக்கையில் இதுவரை 1000 கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 1001வது கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்