தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று சொல்லப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக, அடுத்ததாக 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மெகா வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாக நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு முக்கிய பணிகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பம்பரம்போல் சுழன்று பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் முதல்வர் விரைவில் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக உதயநிதியை துணைமுதல்வராக்கும் நடவடிக்கைகள் விரைந்து வருகின்றன.
இதற்கான முன்னெடுப்பாகவே அண்மையில் தமிழக்ததில் ஐஏஎஸ் உட்பட 65 அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. புதிய அமைச்சரவைக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக நிதித்துறை வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
கடலூரை அதிர வைத்த 3 பேர் கொலை சம்பவம்; தாயின் தற்கொலைக்கு காத்திருந்து பழி தீர்த்த இளைஞர்
இதே போன்று தொழிலாளர் நலத்துறையை நிர்வகித்து வந்த அமைச்சர் கணேசனின் துறையை கோவி.செழியனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதே போன்று சேலம் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் அமைச்சரவையில் புதிதாக இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அமைச்சரவை பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்ட நிலையில், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.