சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. தென் தமிழகத்திற்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலைய அதிகாரிக்கு கடிதம் ஒன்று வந்து சேர்ந்தது. மதுராந்தகம் அடுத்த தாலுகா புக்கத்துறை கிராமம், சமத்துவரும் முகவரியில் இருந்து வந்திருந்த கடிதத்தை பிரித்து படித்துள்ளார்.
அந்த கடிதத்தில், பாமக.வை தரக்குறைவாக பேசிவரும் திமுக அரசுக்கும், கட்சிக்கும் ஒரு பாடமாக கருதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு ரயில் நிலைய அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். கடிதம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை பணியில் ஈடுபட்டனர்.
undefined
போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
பயணிகள் காத்திருக்கும் அறை, நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரயில் நிலையத்திற்குள் கொண்டுவரப்பட்ட பார்சல்கள் உட்பட அனைத்து பொருட்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
பெற்றோருக்கு வந்த சிறுமியின் புகைப்படம்; அலறி துடித்த பெற்றோர் - சென்னையில் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் கடிதம் சம்பந்தப்பட்ட முகவரியில் இருந்து வரவில்லை என்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர். மேலும் கடிதத்தை அனுப்பிய நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.