சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் தாறுமாறாக காரை ஓட்டி சிறுவன் விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பானது.
சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையானது வழக்கம் போல் இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது மாலை 6 மணியளவில் வேகமாக சீறிப் பாய்ந்த கார் ஒன்று சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் குதித்த பெண்கள்; திகைத்து நின்ற அதிகாரிகள்
undefined
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜாம்பஜார் காவல் துறையினர் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்தியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காரை இயக்கியது 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. சிறுவன் தனது நண்பனுடன் சேர்ந்து காரை இயக்கும் போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
உள்துறை செயலாளர் அமுதா உள்பட தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்
இதனை அடுத்து காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் தனது பெரியப்பாவின் காரை எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் சிறுவனின் பெற்றோரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 3 பேர் லேசான காயத்துடன் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பினர்.