Armstrong : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை வழக்கில், பாஜகவின் முன்னாள் உறுப்பினர் திருமதி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் வாசலிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர்ச்சியாக பலர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் உறுப்பினர் திருமதி. அஞ்சலை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டு வாசலில், நின்று பேசிக்கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் Armstrong, கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையின் போது தப்பிச்செல்ல முயன்றதாக கூறி, திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Crime: கடலூரை அதிர வைத்த 3 பேர் கொலை சம்பவம்; தாயின் தற்கொலைக்கு காத்திருந்து பழி தீர்த்த இளைஞர்
மீதமுள்ள 10 பேர் தற்பொழுது சென்னை பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணை நடந்துவரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியாகி வந்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி அதிமுக மேற்கு கழகப் பகுதி துணை செயலாளரான மலர்கொடி என்பவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், திமுக பிரமுகர் ஒருவரின் மகனான சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
Armstrong கொலை வழக்கில் தொடர்ச்சியாக பல கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வடசென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணை தலைவராக, பாஜகவில் பணியாற்றி வந்த திருமதி அஞ்சலை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்பொழுது அவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அறிக்கையில், "தங்களுடைய வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணை தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் அவரை உடனடியாக நீக்குவதாக கட்சி தகவல் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலைக்கு எதிராக ஆக்ஷனில் இறங்கிய பாஜக.!