கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தீ இட்டு கொளுத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் குமார். கடந்த 14ம் தேதி சுதன் குமார் மற்றும் அவரது தாய் கமலேஸ்வரி, மகன் நிஷாந்தன் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
undefined
போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
சங்கர் ஆனந்த் தந்தையை இழந்து தாயுடன் வசித்து வந்த நிலையில், சங்கரின் தாய்க்கும், உயிரிழந்த சுதன் குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவரவே அவமானம் தாங்க முடியாமல் சங்கரின் தாயார் கடந்த சில தினங்களுக்கு முன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சங்கர் சுதன் குமார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
முடங்கிய மைக்ரோசாப்ட்; திண்டாடும் விமான நிறுவனங்கள் - மதுரை, திருச்சியில் விமானங்கள் ரத்து
இதனிடையே கடந்த 12ம் தேதி சுதன் குமாரின் தாயார் கமலேஸ்வரி சங்கரை தாய், தந்தை இல்லாத அனாதை பயலே என திட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற சங்கர் ஆனந்த் சுதன் குமாரின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து சுதன் குமார், கமலேஸ்வரி, 10 வயது சிறுவன் நிஷாந்தனை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு எதுவும் நடக்காதது போல் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் நடந்த சம்பவத்தை தனது நண்பனான சாகுல் ஹமீதிடம் தெரிவித்துவிட்டு 14ம் தேதி இருவரும் இணைந்து மீண்டும் அதே வீட்டிற்குள் நுழைந்து இறந்து கிடந்த மூவரது உடல்களையும் தீ வைத்து எரித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.