கடலூர் மாவட்டத்தில் பாமக நிர்வாகியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற 5 நபர்களை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர், சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சங்கர் என்கிற சிவசங்கர் கடலூர் நகர வன்னியர் சங்க தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டின் அருகே சிவசங்கர் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சிவசங்கரை வெட்டி உள்ளனர்.
தேயிலை தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம்; கிருஷ்ணசாமியின் எண்ட்ரியால் வழக்கில் திடீர் திருப்பம்
இதனைக் கண்ட அருகில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சிவசங்கர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சிவசங்கர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் திருவந்திபுரம் பகுதியில் இருப்பதாக வந்த தகவல் கிடைத்தது.
2 மகள்கள், மனைவியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்? கோவையில் பரபரப்பு சம்பவம்
அதன் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் அங்கு விரைந்தனர். காவல் துறையினரை கண்ட குற்றவாளிகள் தப்பிவிட முயற்சி செய்தனர். இதில் வெங்கடேஷ், சதீஷ் ஆகிய இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் முகிலன், வெங்கடேஷ், சதீஷ், ராஜா, கௌஷிக் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.