எங்கள தொட்டா கரண்டுக்கே ஷாக் அடிக்கும்; நெய்வேலி அருகே போதை ஆசாமி கலேபரம்

By Velmurugan s  |  First Published Jun 24, 2024, 12:39 PM IST

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே போதை ஆசாமி ஒருவர் மின்சார பெட்டியின் மீது உறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் மதுவிலக்கு என்ற துறை உருவாக்கப்பட்டு அத்துறைக்கு ஒரு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் இத்துறை இருக்கிறதா, இல்லையா என்று கேட்கும் அளவிற்கு நாளுக்கு நாள் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நெய்வேலி அருகே ஆபத்தை உணராமல் மின்சார பெட்டி மீது போதை ஆசாமி ஒய்யாரமாக படுத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வி.சி.க.வுக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்த மாமன்னன்; திருமாவுக்கு விழா எடுத்து கொண்டாடிய இளம் பெண்கள்

Tap to resize

Latest Videos

undefined

கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 29-ல் உள்ள ரவுண்டானாவில், இரவு நேரத்தில் வெளிச்சம் தருவதற்காக, ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கிற்கு, மின்சாரம் செல்வதற்காக, Breaker பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மது போதையில் இருந்த ஆசாமி ஒருவர், பட்டப் பகலில், கொளுத்தும் வெயிலில்,  மின்சாரம் செல்லக்கூடிய Breaker பெட்டி மீது, ஏறி படுத்துக்கொண்டு, ஹை மாஸ் விளக்கு செல்லும், கம்பத்தில் கால் மேல் கால் போட்டு தூங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலாப் பேருந்து மீது டாரஸ் லாரி மோதி ஒருவர் பலி

மின்சாரம் செல்லக்கூடிய பெட்டியின் மீது, ஆபத்தை உணராமல்,  பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய பகுதியில், உள்ள ரவுண்டானாவில், அலப்பறையில் ஈடுபட்ட போதை ஆசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாள்தோறும் மது போதை ஆசாமிகளின் அட்டகாசம் நெய்வேலி பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும், இதனை சம்பந்தப்பட்ட நெய்வேலி காவல்துறையினர் கண்டுகொள்ளவது இல்லை எனவும், அப்பகுதி மக்கள் மற்றும் என்எல்சி ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

click me!