Chidambaram Constituency: சிதம்பரம் தொகுதியில் திருமா தொடர்ந்து முன்னிலை; தொண்டர்கள் உற்சாகம்

By Velmurugan s  |  First Published Jun 4, 2024, 10:19 AM IST

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் என 2 தனித்தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் சிதம்பரம் தொகுதியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டுள்ளார்.

Theni Lok Sabha Election Result 2024 : தேனி மக்களவை தொகுதியில் விசில் அடிக்குமா குக்கர்? முன்னனி நிலவரம் என்ன?

Tap to resize

Latest Videos

இவரை எதிா்த்து அதிமுக சார்பில் சந்திரஹாசன், பாஜக சார்பில் கார்த்திகாயினி களம் கண்டுள்ளனர். இந்நிலையில் திருமாவளவன் 22,833 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் திருமாவளவனை காட்டிலும் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவில் உள்ளார்.

click me!