PMK: மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லை; தோல்வி குறித்து நடிகர் தங்கர் பச்சான் காட்டம்

By Velmurugan s  |  First Published Jun 6, 2024, 2:38 PM IST

அண்ணா, பெரியார் பெயரைக்கூறி இன்னும்  எவ்வளவு நாட்கள் மக்களை  ஏமாற்றுவார்கள் என கடலூர் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் காட்டமாக தெரிவித்துள்ளார்.


கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரசாரத்திற்கு மக்களை சந்திக்க 22 நாட்கள் மட்டுமே கிடைத்தது. முழு காய்ச்சலுடன் மக்களை சந்தித்தேன். கடலூர் மாவட்டத்தின் தீராத பிரச்சினைகளை தீர்க்கவே தேர்தல் களம் கண்டு தேர்தலில் 2 லட்சம்  வாக்குகள் பெற்றேன். என்னை நம்பி வாக்களித்து மக்களுக்கு நன்றி.

அண்ணாமலையை நம்பி பந்தயம் கட்டிய தொண்டர்; முச்சந்தியில் மொட்டை அடித்து ஊரை சுற்றி வந்த அவலம்

Tap to resize

Latest Videos

அதிகாரம் இருந்ததால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். இத்துடன்‌ என் அரசியல் களம் நிற்காது. கடந்த முறை வெற்றி பெற்ற 38 திமுக எம்பி.களால் நாட்டுக்கு கிடைத்தது என்ன? உங்கள் தொகுதியின் எம்பி என்ன செய்தார்? மீண்டும் அவர்களே வந்தால் என்ன செய்வார். உங்களுக்கு அரசியல் விடுதலை எப்படி கிடைக்கும் என‌ கேள்வி எழுப்பினார்.

பழனி அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; இளசுகளுக்கு முத்தங்களை பறக்கவிட்ட அழகிகள்

அரசியல் புரிதல் மக்களுக்கு இல்லாததே காரணம் என கடுமையாக சாடினார். அண்ணாவையும், பெரியாரையும் இன்னும் எவ்வளவு நாட்கள் சொல்லி ஏமாற்றுவார்கள் என‌ கடிந்து கொண்ட அவர், அடுத்த 5 ஆண்டுகள் மக்கள்  இன்னல்களை சந்திப்பீர்‌ என‌ காட்டமாக தெரிவித்தார். மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை. என் மொழி, மண், இனத்திற்கு எந்த சிக்கல் வந்தாலும் தங்கர் பச்சான் போராடுவேன் என தெரிவித்தார்.

click me!