கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை அடுத்த காராமணி பகுதியில் வசித்து வந்தவர் கமலேஸ்வரி. இவர் தனது மகன் சுரேந்திர குமார் மற்றும் பேரன் நிஷாந்த் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இவர்களது வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
எனக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி மட்டும் தான்; வரலட்சுமியின் கணவர் கலகல பேச்சு
undefined
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் வசித்து வந்த கமலேஸ்வரி, சுரேந்திரகுமார் மற்றும் நிஷாந்த் ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூவரும் உயிரிழந்தது எப்படி? யாரேனும் கொலை செய்தார்களா என்ற தொணியில் காவல் துறையினர் அப்பகுதியில் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சம்பவ இடத்தில் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று சோதனை நடைபெற்று வருகிறது.
எல்லை மீறும் போட்டோ சூட் கிரியேட்டிவிட்டி? 90 அடி பாலத்தில் இருந்து குதித்த புதுமண தம்பதி
மேலும் வீடு முழுவதும் ரத்தக் கரை படிந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.