Vikravandi : விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த அபிநயா தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jun 14, 2024, 11:30 AM IST

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென ஏற்பட்ட உடல் நிலை குறைபாட்டில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு  தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 21ஆம் தேதியும், ஜூன் 24ஆம் தேதி வேட்பு மீதான பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் எனவும்,  ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாகவும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார்.?

இதனையடுத்து தேர்தல் களத்தில் இறங்கவுள்ள வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளது. திமுக சார்பாக அன்னியூர் சிவா போட்டியிடவுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக  சித்த மருத்துவர் அபிநயா போட்டியிடவுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சவுமியாவிற்கு டப் கொடுத்த அபிநயா

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்வதாக சீமான் கூறியுள்ளார்.  இதனிடையே நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்  தருமபுரியில் செளமியா அன்புமணிக்கு எதிராக நின்றவர் மரு. அபிநயா என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!