நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில்குற்றம்சாட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதை அடுத்து அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
undefined
இதையும் படிங்க: DA Hike: அரசு ஊழியர்களுக்கு காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் தரப்பில், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. கொலை, கூட்டுச் சதி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும்'என வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: AC.சண்முகத்திற்கு என்ன ஆச்சு? சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை! உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை
அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வெளியானது. அதில், குற்றம்சாட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது. ஆகையால் மரண தண்டனை விதிக்க 7 பேரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த கொலையை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக விசாரிக்கப்படவில்லை. கொலை வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்கள் தான் முக்கியமானவர்கள். அவர்களிடம் தான் முதலில் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். அதனை காவல்துறை செய்ய தவறிவிட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல அப்ரூவராக மாறிய ஐயப்பன் காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலமும், மாஜிஸ்திரேட்டிடமும் அளித்த வாக்குமூலமும் முரண்பாடாக உள்ளது. இதனையெல்லாம் பரிசீலிக்காமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது. அதனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை என்றால் 9 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உதத்தரவிட்டனர்.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்துள்ளது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.