சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி ஜாமீன் கோரிய மனுவை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மே 28ம் தேதி கார்த்திக் முனுசாமியைக் கைது செய்யப்பட்டார்.
undefined
இதையும் படிங்க: கேப் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன?
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: கார்த்திக் முனுசாமி முக்கிய பிரமுகருடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென புகார் அளித்த இளம்பெண்ணை மனுதாரர் மிரட்டியுள்ளார். அதற்கு பெண் மறுத்துள்ளார். இதனால் பெரிய அளவில் பணம் கிடைப்பது தடைபட்டு விட்டதால் அவரை திட்டியுள்ளார்.
புகார்தாரருடன் மனுதாரர் பலமுறை உறவு வைத்துள்ளார். மனுதாரர் வற்புறுத்தி அவரை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். மனுதாரரின் செல்போனை புகார்தாரர் ஆராய்ந்தபோது தன்னைப்போல 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதன்பிறகே புகார் அளித்துள்ளார். பல பெண்களின் ஆபாச படங்களை பல முக்கிய பிரமுகர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். எனவே இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. கோயில் பூசாரியான அவருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடுவார் என வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: கொலை வெறியில் அண்ணனை தேடி வந்த கும்பல்! சிக்கிய தம்பியை சின்னா பின்னமாக்கிய கொடூரம்.. சென்னையில் பயங்கரம்!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி கோயில் பூசாரியான மனுதாரர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கோயில்களுக்கு மன நிம்மதி தேடிச் செல்லும் இளம்பெண்களை இவர் வேறு மோசமான கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளார். பொதுமக்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக கோயிலில் பூஜை, புனஸ்காரங்களை மேற்கொள்ளும் குருக்கள் மற்றும் பூசாரிகள் மீதுதான் அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை இவர் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார். இவரின் அற்பத்தனமான நடவடிக்கையால் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறுவதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.