சென்னையில் பால்கனியில் விழுந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய் திடீர் தற்கொலை-போலீசார் விசாரணை

By Ajmal Khan  |  First Published May 19, 2024, 2:44 PM IST

சென்னையில் திருமுல்லைவாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் தவறி விழுந்த கைக்குழந்தையை மீட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது குழந்தையின் தாய் ரம்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


பால்கனியில் விழுந்த பச்சிளம் குழந்தை

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் ஒரு கைக்குழந்தை தவறி விழுந்துள்ளது, இந்த மேற்கூரையில் இருந்து குழந்தை கீழே விழ இருந்த நிலையில், அந்த குடியிருப்பு வாசிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தையை மீட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கூரையில் விழுந்து கிடந்த குழந்தையை மீட்ட  காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள்  வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதால், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Tap to resize

Latest Videos

மருமகனை கொன்று கிணற்றில் வீசிய மாமியார்; 8 மாதங்கள் நாடகமாடிய குடும்பம் - திருப்பூரில் பரபரப்பு

சொந்த ஊருக்கு சென்ற குழந்தையின் தாய்

 வீட்டின் பால்கனியில் இருந்து துடைப்பத்தை தாய் கையில் எடுத்தபோது கையில் இருந்து தவறி குழந்தை விழுந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் குழந்தையின் தாயை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். குழந்தையை சரியான முறையில் கவனிக்கவில்லையென விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன், இவரது மனைவி ரம்யா, இவர்களது சொந்த ஊர் காரமடை, இவர்கள் சென்னையில் திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள அப்பார்ட்மெண்டில் குடியிருந்துள்ளார்கள்.

குழந்தையின் தாய் தற்கொலை

குழந்தை காப்பாற்றப்பட்ட  சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து சொந்த ஊரான காரமடைக்கு வந்துள்ளார்கள்.  நேற்று வீட்டில் அனைவரும் வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை கைப்பற்றியவர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட  ரம்யா சிறிது நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஒருவர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை

click me!