இன்று உருவாகிறது புயல்..! வட மாவட்டங்களில் வெளுத்துக்கட்டப்போகும் மழை..! இந்திய வானிலை ஆய்வு மையம்

By Ajmal KhanFirst Published Dec 7, 2022, 9:40 AM IST
Highlights

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு இருப்பதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருவாகிறது புயல்

வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாலை வலுப்பெற்றது. தொடர்ந்து இது தற்போது இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு கிழக்கே தென் கிழக்கே 770 கிலோ மீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு கிழக்கே தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தொடர்ந்து இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை  புயலாக வலுபெற்று  அதன் தொடர்ச்சியாக  நாளை காலை புயலாக தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு எதிர்பார்க்கபடுகிறது.

மீனவர்கள் கரைக்கு திரும்ப உத்தரவு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இன்றைய தினம் இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் நேற்று மாலைக்குள் கரை திரும்ப வலியுறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என பேரிடர் மீட்பு துறையின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி சென்னை மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் உள்ள  மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. 

கடல் அலையின் சீற்றம் அதிகரிப்பு

மேலும் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் துறைமுகத்திற்கு திரும்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மெரினா,பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது கடல் அலைகள் இயல்பை காட்டிலும் இரண்டிலிருந்து மூன்று அடி உயரத்திற்கு மேல் எழும்புவதை பார்க்க முடிகிறது.

இதையும் படியுங்கள்

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் போட்டி.! கோயில் ராஜபட்டரின் வேட்டியைப் பிடித்து இழுத்த திமுக எம்எல்ஏ

click me!