தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்:
undefined
வீரபெருமாள் கோயில் தெரு, பங்காரு அம்மாள் கோயில் தெரு, அப்பர்சுவாமி கோயில் தெரு, சிதம்பர சுவாமி கோயில் 1 முதல் 3வது தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
பெரம்பூர்:
காந்திநகர் முத்தமிழ் நகர் 2வது மற்றும் 3வது பிளாக், சீனிவாச பெருமாள் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.