எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன்! இதுபோன்ற ஒருவரை பார்த்தது இல்லை! RN.ரவியை புகழ்ந்து தள்ளிய மதுரை ஆதினம்

By vinoth kumarFirst Published Dec 5, 2022, 8:18 AM IST
Highlights

சென்னையில் சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பாராம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சட்டையில்  ஆளுநர் ஆர்.என்.ரவி அணிந்து வந்திருந்தார்.

அனைவரும் வைச உணவாக சாப்பிடுங்கள். ஒருவர் என்ன உணவு உண்கிறாரோ அப்படி தான் அவர்களுடைய செயல்பாடு இருக்கும் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். 

சென்னையில் சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பாராம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சட்டையில்  ஆளுநர் ஆர்.என்.ரவி அணிந்து வந்திருந்தார். அப்போது, விழாவில் பேசிய ;- தமிழ்நாட்டில் பிறப்பது புண்ணியம். அதை விட புண்ணியம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது. அனைவரும் வைச உணவாக சாப்பிடுங்கள். ஒருவர் என்ன உணவு உண்கிறார்களோ அப்படி தான் அவர்களுடைய செயல்பாடு இருக்கும் என்றார். 

இதையும் படிங்க;- பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவி விட்ருவாங்க.. பேட்டியில் இருந்து எஸ்கேப் ஆன மதுரை ஆதீனம் !

எல்லா படிப்புகளும் 5 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், அர்ச்சகர்கள் படிப்பு ஒரு ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. இதை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு  தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் ஆங்கிலம் அதிகமாகிவிட்டது. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போனாலும் அவன் மொழியும். சமயமும் நம் நாட்டை விட்டு போகவில்லை. நம் சமயத்தை போல உலகில் வேறு சமயம் கிடையாது. 

மருது பாண்டியன், ராஜராஜ சோழன் கட்டிய அரண்மனைகள் இல்லை. ஆனால் அவர்கள் கட்டிய கோவில்கள் உள்ளது. எனவே ஆன்மீக என்றும் நிற்கும், அரசியல் அழிந்து போகும். இப்போதும் பாண்டவர்களும், கவுரவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் கவுரவர்களே பிடிக்கிறது. எத்தனையோ கவர்னரை பார்த்து இருக்கிறேன். இது போன்ற கவர்னரை பார்த்தது இல்லை. ஆன்மீகம் தெரிந்த கவர்னர் நமக்கு கிடைத்துள்ளார். கவர்னருக்கு எத்தனையோ எதிர்ப்பு, என்னையும் எத்தனையோ பேர் எதிர்க்கிறார்கள். இவர் உறங்கி கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இவர் ஓடவும் இல்லை,  உறங்கவும் இல்லை. மதுரைக்கு வரும் போது ஆதீனத்திற்கும் வர வேண்டும் என ஆளுநருக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் படிங்க;- சங்கராச்சாரியர் கம்பி எண்ணியது தெரியுமா.? மோடி பூச்சாண்டியா காட்றீங்க.? மதுரை ஆதினத்துக்கு திமுக பதிலடி!

click me!