தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பா..? புதிய புயல் சின்னம் உருவாகிறதா..? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

Published : Nov 13, 2022, 09:41 AM IST
தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பா..? புதிய புயல் சின்னம் உருவாகிறதா..? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

சுருக்கம்

தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மழை குறைய வாய்ப்பா.?

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையானது தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடலூர், சீர்காழி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை நீரானது தேங்கி உள்ளது. கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழையானது எப்போது நிற்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு தகவலில்,  வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த நிலையில் தற்போது வட உள் தமிழகம் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகள் மற்றும் கேரள கடற்கரை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்ச்சியாக நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு,உள்நாட்டு சதி உள்ளது..! மத்திய அரசிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது- ரவிச்சந்திரன் வேதனை

புதிய புயல் சின்னம்.?

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது , நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து வரும் 15 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 16ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

32 ஆண்டுகள் சிறை..இன்னும் திருப்தி இல்லையா.? நான் கணவருடன் செல்வேன் - உருக்கமாக பேசிய நளினி !

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!