
இரட்டை இலை சின்னம் குறித்து இரு அணிகளின் மனுக்கள் மீது முடிவெடுக்க எவ்வளவு காலமாகும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும் ஒபிஎஸ் தரப்பில் மதுசூதனும் வேட்பாளராக போட்டியிட்டனர்.
இரண்டு தரப்பும் நாங்களே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.
இதில் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் அதிமுக பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கியது. இதையடுத்து அதிமுகவின் இரு தரப்பும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டது.
மேலும் இருந்தரப்பும் அதிமுக நிர்வாகிகள் எங்களிடமே உள்ளதாக பிரமாணபத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இதைதொடர்ந்து எடப்பாடியும் ஒபிஎஸ்சும் ஒன்றாக இணைந்து விட்டனர். ஆனால் டிடிவி தரப்பு பிரிந்து நிற்கிறது.
இதையடுத்து ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் பிரமாண பத்திரங்களை திரும்ப பெறுவது என முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் குறித்து இரு அணிகளின் மனுக்கள் மீது முடிவெடுக்க எவ்வளவு காலமாகும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.