14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

First Published Sep 14, 2017, 7:38 PM IST
Highlights
The Home Secretary has ordered transfer of 14 IPS officers in Tamil Nadu.


தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துணை முதல்வர் ஒபிஎஸ்சின் துணை செயலாளராக சந்திர சேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கால்நடை பராமரிப்புத்துறையின் இயக்குநராக ஜெயந்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜியாக வினித்தேவ் வாங்கடே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் மோலாண் இயக்குநராக தமிழ்செல்வன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊர் காவல்படை கூடுதல் டிஜிபியாக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலர் நலப்பிரிவு ஏடிஜிபியாக கருணாசாகர், ,உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக சுந்தரவடிவேல் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக காந்திராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 

click me!