IT RAID : கட்டுக்கட்டாக பணம்..? கிடைத்த ரகசிய தகவல்..! சென்னையில் 5 இடங்களை சுற்றிவைத்த வருமானவரித்துறை

By Ajmal Khan  |  First Published Apr 2, 2024, 10:24 AM IST

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் குவித்து வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து வட சென்னையில் உள்ள 5 இடங்களை சுற்றிவளைத்து வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் கொடுக்கவும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனையடுத்து பணம் விநியோகத்தை கட்டுப்படுத்து தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், பல மாவட்டங்களில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பறக்கும் படை அமைத்துள்ளது.

Latest Videos

வருமான வரித்துறை திடீர் சோதனை

இந்தநிலையில் வருமானவரித்துறையின் கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று காலை ஒரு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதில் வட சென்னை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக ஒரு சில இடங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குவித்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அலர்ட்டான வருமான வரித்துறை அதிகாரிகள், ஏழு கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கரா தெருவில் இன்துராம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்போடு சோதனை

அதேபோல் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வருமானவரிதுறை சோதனையில் பணம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

தைரியம் இருந்தால்,திராணி இருந்தால் இங்கே வந்து பேசுங்கள்!பிரச்சாரத்தில் வாக்காளருடன் மோதிக்கொண்ட திமுக எம்எல்ஏ

click me!