சென்னையில் உலக முதலீட்டார்கள் மாநாடு... போட்டி போடும் நிறுவனங்கள்- 5.50 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க திட்டம்

By Ajmal Khan  |  First Published Jan 7, 2024, 7:28 AM IST

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அடிடாஸ், போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வளர்ச்சி அடைந்த மாற்றவும், அந்நிய தொழில் முதலீடுகள் ஈர்க்கவும் ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து தற்போது திமுக அரசு சார்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பணியானது நடைபெற்றது. இந்தநிலையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (ஜன.7, 8-ம் தேதிகளில்) இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  அதன்படி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார்.

Tap to resize

Latest Videos

சென்னையில் அடிடாஸ்

இந்த மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.  இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது. மேலும் தமிழகத்தின் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அடிடாஸ், போயிங் நிறுவனங்கள் சென்னையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ளது.

5.5 லட்சம் கோடி இலக்கு

மாநாட்டில் “1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” (“Tamil Nadu Vision $1 Trillion”) எனும் ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. . 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளார்கள். 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

2024 அல்ல 2038 வரை மோடி தான் பிரதமர்; பதிவு துறையில் சோதனை செய்தால் மாநிலத்தின் பாதி கடனை அடைக்கலாம் - அண்ணாமல

click me!