ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை... இந்த தேதியில் கண்டிப்பாக இயங்கும்- உணவுத்துறை உத்தரவின் காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Nov 1, 2023, 9:25 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 5 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் எனவும், விடுமுறை இல்லையென உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


ரேஷன் கடைளுக்கு உத்தரவு

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல வாரங்களுக்கு முன்பே பொதுமக்கைள தங்களது ஷாப்பிங்கை தொடங்கிவிட்டனர். சென்னையில் தியாகராய நகரில் தினந்தோறும் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகை தினத்தில் இனிப்புகள், பலகாரங்கள் செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுப்பது வாடிக்கை. அந்த வகையில் மளிகை பொருட்களையும் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில்  இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லையென உணவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை திறக்க உத்தரவு

அதில், அனைத்து நாட்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும்  தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு குடும்பத்தினர் முன்கூட்டியே அரிசி,சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்பதால் இருப்பு சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. வழக்கமாக பல ரேசன் கடைகள் முதல் 2 வாரம் வெள்ளிக்கிழமை தான்  விடுமுறை. ஞாயிறுக்கிழமை  திறந்து இருக்கும். பகுதி நேர கடைகள் மற்றும் சில கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அந்த  கடைகளை  திறந்து  வைக்க  உணவுத்துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

கண்ணை கசக்கும் வெங்காயம் விலை.. உச்சத்தை தொட காத்திருக்கும் தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

click me!