தஞ்சையில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கரண்டி, எண்ணெய் சட்டியுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Oct 31, 2023, 6:25 PM IST

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரி எண்ணெய் சட்டி, கரண்டியுடன் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த விவசாயிகளால் பரபரப்பு.


தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்து வருவதால். தஞ்சை மாவட்டத்தில் 33 சதவீதம் குறுவை சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தீபாவளி பண்டிகையை விவசாயிகள் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, இன்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் பலகாரம் சுடுவதற்கு எண்ணெய் சட்டி எதற்கு என கேட்டு கைகளில் எண்ணெய் சட்டி கரண்டியை ஏந்தியபடி வந்தனர். 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் கொலைவெறி தாக்குதல்; மன்ற கூட்டத்தில் நாற்காலிகள் பறந்ததால் பரபரப்பு

Tap to resize

Latest Videos

undefined

மேலும் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு தேதியை நவம்பர் இறுதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். விவசாய கடன் மற்றும் - விவசாயிகள் குழந்தைகளின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கமிட்டவாறு கூட்ட அர்ங்கத்திற்குள் நுழைய முயன்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காவல்துறையினர் தடுத்து ஆயுதத்துடன் கூட்டத்திற்கு செல்ல கூடாது என கூறி அவர்களிடம் இருந்து எண்ணெய் சட்டி, கரண்டியை பறிக்க முயன்றனர். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வலுக்கட்டாயமாக விவசாயிகள் எடுத்து வந்த எண்ணெய் சட்டி, கரண்டியை பறித்து பாதுகாப்பாக வைத்தனர். இதனால் கூட்ட அரங்கம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!