
தமிழகத்தில் பாஜக சோதனை
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி வீடுகளில் சோதனை செய்த அமலாக்கத்துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து புழல் சிறையிலும் அடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் அடுத்ததாக மணல் மாபியாக்களை அமலாக்கத்துறை குறி வைத்து அடுத்த கட்ட சோதனையில் ஈடுபட்டது. அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை சிக்கியது.
பாஜக அலுவலக ஊழியர் வீட்டில் சோதனை
அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளது. தஞ்சாவூர். மதுரை, காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா தெருவில் விஜய் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சண்முகத்திற்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அமலாக்கத்துறை சோதனை நிறைவு
அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் சண்முகத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஜோதி குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சண்முகத்தின் ஏதாவது ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக என விசாரணை நடத்தினர். இந்த சோதனை நடைபெற்று கொண்டிருக்கும் போதே வங்கி பணவர்த்தனை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சுமார் 5 மணி நேரம் சோதனையானது நடைபெற்றது.
இதையும் படியுங்கள்